Monday, August 8, 2016

சுட்டபுண்












சுமாரான தோசையை இட்டுக்கொண்டிருந்தேன்
வட்டமும் சதுரமுமாய் கிழிசலுடன் சிரித்தது
கட்டம்போட்ட சட்டையுடன் அவனே நினைவில்வர
குறும்புடனே கிள்ளுவதாய் கல்லிலே கைவைக்கப்
பட்டபுண்ணைத் தடவியதில் மெல்லியதாய்ச் சுகவலி

2 comments:

  1. இந்த சுட்டபுண் கண நேரத்தில் ஆறி விடலாம். ஆனால் அவனின் நினைவுகள் தூக்கத்திலும் ஆறாமல் சுடுகின்றதே!!

    ReplyDelete
    Replies
    1. தோசை சுடவந்தவளுக்கு, மீசை சுட்டதால் வந்த விளைவது. பதிவை ரசித்தமைக்கு நன்றி

      Delete