முடியாத கனவதனில்
தேடிய முகங்களெல்லாம்
அவனது சாயல்...
குறும்புப் பார்வையுடன்
அதிவீரன் குதித்தான்
முன்னே
இடரையெல்லாம் போக்கும்வண்ணம்
அன்பே, ஆருயிரே யென்று
செல்லம் கொஞ்சக் கன்னம்தீண்டி
காதலதன் விளக்கம் சொன்னான்
எக்கணமும் என் கனவாம்
இழுப்பதெல்லாம் என் நினைவாம்
சுதந்திரமாய் இருக்கவிடு!
கெஞ்சினான்..
எழுந்திருந்தால் கலைந்துவிடும்
என்று உருப்படியாய் தூங்கிப்போனேன்...
-சகி
Dear Sagi,
ReplyDeleteI hit upon your website by accident and read some of your works.This kavithai,blew me off in multiple levels.The way it has been structured is sheer genius.The two titles absolutely complement each other and most importantly,the karuthu of this kavithai is such a delight to read.complete package which hits you in all levels.Absolute pleasure.Please do write more