கோப்புகள் மறந்து
கோபிக்கும் மேலாளர்தமை மறந்து
கூடியிருக்கும் நண்பர்மறந்து
கால்கடுக்கக் காத்திருந்து
'கார்த்திக்' திரையரங்கில்
காதலி கைப்பிடிக்கக்
காலியிடம் தேடியமர்ந்தால்...
நகர்ந்தமர்க!!! என்றாளவள்....
எத்தனை தடங்கள்- அதில்
எத்தனை தடங்கல்
அக்காவைப் பார்க்கவந்த கூட்டம்தாண்டி
அகிலாவின் அலைபாயும் கண்கள்தாண்டி
அம்மாவின் ஏசல்கள் எல்லாம்தாண்டி
அத்தானின் விரல்பிடிக்கும்
கனவெண்ணிப் போகையிலே.
மூன்றுமணிப் படத்துக்குமுன்
மூன்றுநாள் தொல்லை...
நகர்ந்தமர்க!!! என்றாளவள்....
நகர்ந்தான்....
இருவருமே அங்கலாய்க்க
இருதிசையில் தலைகள்சாய்க்க
இருக்கையில் அமர்ந்திருந்த
எறும்பொன்று
காதலனின் காலிடுக்கில்
மாட்டி மடிந்திட்ட
தன்சோடி முகம்பார்த்துக்
கலங்கிற்று...
அவரவர் கவலை அவர்க்கே!!!!!
- சகி
அவரவர் கவலை அவர்க்கே!!!!
ReplyDeleteஆமாம், தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்!!
எத்தனை தடங்கள்- அதில்
ReplyDeleteஎத்தனை தடங்கல்
அவரவர் கவலை அவர்க்கே
Good one.. By prem kumar seshadri
வருகைக்கு நன்றி
Delete