ஆருயிர் பிரிந்து
ஆண்டொன்று
ஆயிற்று.
ஆசைகள் எரிந்து
ஆத்திரம் நிறைந்திட்ட
ஆட்களில்லா நேரத்தில்
ஆன்மாவின் வலி,
ஆயிரம் சத்ததுடன்....
ஆறுதல் சொல்ல
ஆருமில்லையென்றிருக்கையில்
ஆவியாய் வந்து சொன்னான்
ஆரூடமொன்று.
ஆண்டுமுடிவதற்குள்
ஆவன
ஆகுமென்றும்
ஆத்திரம் தீருமென்றும்...
ஆக்கமாய், ஊக்கமாய்
ஆசையின் தேக்கமாய்
ஆனந்தத் தூக்கமாய் என்னை
ஆக்கிரமிப்பானென்றும்...
ஆழ்ந்த மௌனத்தையும்
ஆர்ப்பரிக்கும் அரற்றலையும்
ஆராய்ந்தால் தெரிவது அவனேயென்றும்...
ஆகச்சிறந்த செய்திகேட்டு
ஆவலில் நான்...
-சகி
It is a treat to read this.Amazing Aa series and awesome thought-Madhu
ReplyDelete