Monday, December 21, 2015

விளிம்பில் வழியும் எண்ணங்கள்




 அடுப்பில் பால் கொதித்துக்கொண்டிருந்தது...
 நுரையாய் அவள் எண்ணங்கள்

  இதுதான் தருணமா?
    முடிவு சரியாய் இருக்குமா?
      அவனாதிக்கம் மனம் பூராவும்

இன்னும் நுரைக்க ஆரம்பிக்கவில்லை..
  சூட்டை அதிகமாக்கினாள்

    அப்பா என்ன சொல்வார்?
       அம்மா என்ன செய்வாள்?
         அக்கா கல்யாணம் நின்றுவிடுமா?
           இன்னும் பொறுக்க வேண்டுமோ?


காற்றுக் கொப்பளங்கள் தெரியத் தொடங்கின
அவள் கை பாத்திரத்தின் பிடியில் இறுக்கமாய்

   இன்று சொல்லவில்லையானால்
      எங்கோ போய்விடுவானோ?
      விளிம்பிலிருந்தாள் விடைதெரியாமல்

பாலும் பொங்கியது.


- சகி







7 comments:

  1. பால் பொங்கிய பொழுதேனும் அவள் மனம் தெளிந்திருக்கலாம். எண்ணங்கள் சிதறாமல் சிந்தித்து முடிவெடுக்கவும், கொதித்த பால் ஆறித்தான் ஆகவேண்டும், காலம் தாழ்த்தியாவது.

    அருமையான எண்ணம், நல்ல வார்த்தை தேர்வு.

    ReplyDelete
    Replies
    1. வருகை, வார்த்தைகள், வாழ்த்துக்கள் - அனைத்துக்கும் நன்றி

      Delete
  2. பாலை பாராமல்
    மாலையாய் கோர்த்த
    என்ணப்பால் ஈர்ப்பு
    உள்ளக் கொதிப்பு

    கொதித்த பாலை
    இறக்கியபின்
    மீண்டும் தொடரும்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வார்த்தைகளுக்கும் நன்றி

      Delete
  3. vilimbil iruntha pal pongi veli pattathai pol aval varathaigalum manathil irnthu veli patirukkalam..nice one

    ReplyDelete
  4. Pathu maadham karuvai sumakum thanmai udaiyaval penn …
    Veppathin thaakam porukaamal pongi udaiyum katru kumizhi pol balaveenamandhu alla avaladhu ennangal …
    Nerupu kannalai ulladakki adhai karungal aaki minnum vairamai maatri tharum bhoomi thaiku theriyum …
    Pennin ennangal adhai vida valimaiyanavai endru …
    Sorry Mr. Writer …definitely found a pizhai in your thinking !

    ReplyDelete