Saturday, December 19, 2015

சுமை




சுமை


கனமின்றிச் சுமப்பது
கருவில் மட்டுந்தான் போலும்..
கருமத்தின்
கட்டாயங்கள் 
கனமானவை.
கட்டுக்கடங்கா
கண்ணீர்மல்கும்
கணங்களில்
கவிதைகளே
காப்பு.
கற்பனைக்
கைகள்
கொண்டவை
கண்ணீர் துடைத்த
கணங்களில்
கருவிலே மீண்டும் நாம்
குழந்தைகளாய்...

-சகி

8 comments:

  1. One in loss will feel the touch of these words reaching your soul ...I take pride in enunciating myself as your first fan of this sakiye2

    ReplyDelete
    Replies
    1. Thanks for visiting and your encouraging comments.

      Delete
  2. One in loss will feel the touch of these words reaching your soul ...I take pride in enunciating myself as your first fan of this sakiye2

    ReplyDelete
  3. அருமை

    கருவின் சுமை நமக்கு தெரிவதில்லை
    ஏனெனில் அதை எந்த தாயும் சொல்வதில்லை
    சுக சுமையாய் நினைப்பதாலோ
    அன்றி
    மழலையால் வரப்போகும் அதனிலும்
    பெரும் சுமை நினைந்தோ - VIJAYAKRISHNAN

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி.
      தங்கள் புரிதலே எனக்கும். புறச்சுமைகளைக் காட்டினும் அகச்சுமையின் பாரம் அதிகம்.
      வடுக்களும் அதிகம்.

      Delete
    2. I slightly differ as no mother will think her son/daugh will bring much more in future...i still believe thanalamattrathu thaimai mattumae.thai eppozhuthum avaru sinthiparathukku vaippu illai..ethilum vithi vilakku irukalam.. sumai enbathu naam parkum konamae andri athan thamai alla..naam ethai virumbavillaiyo athu namakku sumai...athu naam satchiyaga parthal athu sumai alla...practically not possible but this is absolute truth..

      Delete
    3. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      தன்னலமற்றது தாய்மையென்பதாலேயே, அது சுமையை சுமையாய்க் கருதுவதில்லை. கண்ணுக்கு இமை சுமையா?

      Delete
    4. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      தன்னலமற்றது தாய்மையென்பதாலேயே, அது சுமையை சுமையாய்க் கருதுவதில்லை. கண்ணுக்கு இமை சுமையா?

      Delete