Monday, December 14, 2015

அண்ணாமலை - அறிமுகம்




படிக்கத் தூண்டும் எழுத்துக்கள் எவ்வளவோ இருக்க, நம்மை எழுதத் தூண்டும் எழுத்துக்கள் சிலவே.

என்னை ஈர்த்த கவிஞர்களில், வாலி அவர்களுக்குத் தனி சிம்மாசனமே உண்டு. அது அனுமன்போல் தானாகவே இட்டுக்கொண்டு அமர்ந்த வாலாசனம். வாலியாசனம் என்றே கொள்ளலாமே !!!

வார்த்தைகளால்
விதையை
விருட்சமாக்கும்
வித்தைசெய்து
வலிமைமிக்க
வாக்கியங்கள்
வார்த்து
வியக்க
வைத்தவர்
வாலி.

அவர்பால் ஏற்பட்ட ஈர்ப்பு -
அதனால் இந்த கோர்ப்பு.

காப்பியங்களைக் கோர்ப்பது- அம்மகானுக்கே சாத்தியம் - அவரைக்
'காப்பி' - அடிக்காமலிருப்பதரிது- நானறிந்த சத்தியம்.

               
நரைதாடிக் கவிசொன்ன சூரியபரம்
பரைக் கதைகள் மத்தியில் - மக்கள்வென்ற
திரைக்கதையொன்றை மறுவடிவில்தர
அரைகுறையான ஆவலில்...

இதோ உங்கள் முன்னால்.....

அண்ணாமலை.

2 comments:

  1. I am waiting !!! May be because I know what's coming. ooohoooooo

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete