Sunday, December 13, 2015

சாமானியன்




நலிந்தவன்  கதைகேட்டாய்- 
நல்ல  கண்ணீர்  இரண்டுசொட்டு 
இழந்தவன்  மொழிகேட்டாய்- 
     இடிநெஞ்சில்  இறங்கியது 

மணல்கொள்ளை  பயங்கரம்- 
     மனதால்  வைதாய் 
மழலைப்பெண்  வன்புணர்ச்சி- 
     மழையாயின  கண்கள் 

சுரங்கத்தில்  சுரண்டல்- 
     அரண்டே  போனாய் 
சூடானில்  கலவரம்- 
     சத்தியமாய்க்  கலங்கினாய் 

ஏர்முனையில்  கிழவன்  கதறல்- 
     ஏனென்று  உனக்குள்  கேள்வி 
போர்முனையில்  சிப்பாய்  செத்தான்  - 
     பொரிந்து  தள்ளினாய் 

யார்வந்து  தேற்றுவார்கள்- 
     யார்வந்து  மாற்றுவார்கள் 
பார்வைக்குத்  தெரியாத  நல்லவனை  நினைத்துப் 
போர்வைக்குள்  நீ  தூங்கிப்போ!!! 

-  சகி 

6 comments:

  1. சென்னை வெள்ளத்தில் உதவிய பார்வைக்குத் தெரியாத நல்லவனை மறந்து போர்வைக்குள் எவரேனும் தூங்கிப்போக முடியுமா? சில சமயம், அந்த நல்லவன் கண்முன் தோன்றுகிறான் இயற்கையின் பேரிடர் காலத்தில்.

    ReplyDelete
  2. The empathetic, kind hearted''Samaniyan' could pray, may be send a cheque and only wonder with a pang, how a few are able to be so proactive and spontaneous in going beyond the emotion and act. This samaniyan is not alone, there are many, but they don't interact... This loneliness, the self-criticism is a lump in the throat and almost a physical pain. So well expressed Satish. I could identify! All the best! Keep writing, pl.

    ReplyDelete
  3. The empathetic, kind hearted''Samaniyan' could pray, may be send a cheque and only wonder with a pang, how a few are able to be so proactive and spontaneous in going beyond the emotion and act. This samaniyan is not alone, there are many, but they don't interact... This loneliness, the self-criticism is a lump in the throat and almost a physical pain. So well expressed Satish. I could identify! All the best! Keep writing, pl.

    ReplyDelete
    Replies
    1. Thanks for visiting and your encouraging comments.

      Delete
  4. nice...but could have been positive as lot of good things are also happening around us..samanyian parvayil :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி.
      இதை நான் எழுதியது பல வருடங்களுக்கு முன்.

      மேலும்,
      தமிழகத்தில் வெள்ள நிவாரணத்தில் ஈடுபட்டவர்கள் சாமானியரல்லவே! சேவைமூலம் தரத்தில், தளத்தில் உயர்ந்து அடுத்த கட்டம் சென்றவர்.
      என் பேனா கிறுக்கியது என்போன்று போர்வைக்குள் சென்று தொலைக்காட்சி பார்த்து ‘உச்’ கொட்டிய சாமனியனை.

      Delete