
பாசத்துடன் பால்தருவான்
பதிலுக்குக் காசெல்லாம் எண்ணாமலை - இவன்
ஊரிலுள்ள தம்பிக்கெல்லாம் அண்ணாமலை
சேறடித்த காரின்மீது கல்லடித்த பின்னே
வேர்பிடித்த நட்பு என்றும் வீற்றிருந்ததென்ன
பார்படித்த நண்பன் செல்வமாளிகையில் மின்ன
தேர்பிடித்த தெய்வம்போல நெஞ்சிலாழ்ந்ததென்ன
பேர்தருவார் சீர்தருவார்
ஊர்தருவார் வேர்தருவார்
தேர்தருவார் பார்கூடத்தருவாருண்டு
ஆர்தருவார் இவன்போலன்பை?
ஆர்பெறுவார் இவன்போல்பண்பை?

தனமின்றி வாழ்ந்தாலும்- மன
கனமின்றி வாழ்ந்தான் இந்த ஆமகன்..
கவலையில்லாக் கோமகன்

நட்புடன் பொறுப்பும்கொண்டு
வைவதுபோல் வைதுவைத்தான் - பின்
தன்னாசி பெய்துவைத்தான்
கல்லூரிப் பெண்ணொருத்தி

நில்லாமல் செல்கையிலே
கல்லாதான் இவனைக்கண்டாள்
கண்ணணாய் ஒருநாள் கண்டாள்
மன்னனாய் மறுநாள் கண்டாள்
'என்ன நான் செய்வேனென்று'
சின்னதாய்க் குழப்பம் கொண்டாள்

பாம்பின்பால் பயம்கொண்டு
பார்க்காத திசையெல்லாம் ஓடினான்
பாவையவள் குளியலறை நாடினான்...
தொடரும்...
-சகி
kannanaai kandaval kalvanai kanavillayo..illai kannanae kalvan endru enni nagaithalo
ReplyDeleteவருகைக்கு நன்றி. ’கள்வனாய் கண்டாள்’ - நான் காண மறந்தேன். சுவையான கற்பனை. நன்றி.
Delete