முன்பொருநாள்.....
காரும் சிலபேரும் திடீரென வந்தனர்
ஆக்களை அவிழ்த்தனர்
சாணத்தையும் வைக்கோலையும் சுத்தஞ்செய்தனர்
கொடிகளும் சுவரொட்டிகளும் வைத்து அசுத்தஞ்செய்தனர்
சிலைபோலானான் மலை...
ஆர்செய்ததிதென்றான்..
வாக்குகேட்டு வந்து வென்று
போக்கு தெரியாமல் போய்
தேக்கி வைத்த பணமெண்ண
நேரமில்லா நேர்மையில்லா
போக்கிரியென் றரிந்தான்
தன் நாலுகால் நண்பர்கள் புடைசூழ
அம்மா வீடுவிட்டு
அம'¢மா'வீடு புகுந்தான்
எங்கும் பணநெடி..பொறுத்தான் ஒருநொடி..
அவிழ்த்தான் நண்பர்களின் கண்டக்கொடி..
அம்மா அம்மா வென்ற பாசக்குரல்கள்
வீடெங்கும் ரீங்காரமிட்டது
"ஆரடா என் வீடு புகுந்தது
வீடுபுகுதலென் வேலையல்லவா" வென்று
கோரக் குரலோன் கோரினான்
இழைத்துச் செய்த தேக்குப் படிக்கட்டும்
அழைத்துச் செய்த காஷ்மீர் கம்பளமும்
பிழைப்புக்காய் பால்கறக்கும் இல்லாதவன் மாடுகளால்
குழைந்தே போயின சாணமும் கோமியமும்
ஆத்திரமடைந்தான் இருபது மோதிரத்தான்....
"ஆரிடம் மோதினாய் தெரியுமா
பேருடன் இருக்கும் நானுனை என்ன செய்வேனென்று
ஆரூடம் கேட்டால்தான் புரியுமா" என்று
வேருடன் பிளந்த ஆல்போல் ஆர்ப்பரித்தான்
எதிரேயிருந்தது மணல் குன்றல்ல..
அனல் குன்று ..
வெகுண்டெழுந்தது
"பேரும் பணமும் காரும் தனமும்
ஊருள் இருப்பதால் பெரிதா நீ?
ஐந்தாண்டுக்கொரு முறையெமையே காண
ஊருள் வருவதால் அரிதா நீ?"
படித்துப் பிழைத்தல் ஒருவகை - விதை
வெடித்துப் பிழைத்தல் ஒருவகை- புகை
மடித்துப் பிழைத்தலும் ஒவ்வும்- ஏழைமடி
யடித்துப் பிழைத்தல் பிச்சையினும் கீழ்மையே
பணம்செய ஆயிரம் வழியுண்டு- புனித
அரசியல் ஏனுனக்கு??
என்வழியில் நான்செல்ல,
சேதமேன் அன்புக்கிழைக்கிறாய்?
ஏனெனை வம்புக்கிழுக்கிறாய்?
என் நண்பர்களால் பால் இயலும்
அதனால் எனக்கு அரிசி இயலும்
இதைவிடுத்து வேறொரு அரசியலும்
எனக்கு வேண்டாம் எனைவிடுங்களென்றான்
காலணி கொண்டு காதணி யருகே
காதலின்றி அறைந்தாற்போலிருந்தது...
திரும்பாக் குழந்தை
திரும்பத் திரும்பத்
திரும்பும் முயற்சிபோல்
திருந்தாதான் மனத்தில்
திரும்ப ஒலித்தன அவ்வார்த்தைகள்
மறுநாள்..
ஊரில் கொள்ளையடித்தவன்
வேரில் வௌ¢ளையடித்திருந்தான்
காரிலேறி ஆயில் வந்தான்- நல்வார்த்தை
ஈதவனை ஈன்றவளிடத்தே வந்தான்
பெற்றாலிவன் போல் மகன்வேண்டும்
தொழுவமிருக்கும் இக்கோயில் தெய்வமுன்னைத்
தொழுதால் தகுமென்றான்
அதிகாலைப் புல்நுனிப் பனிபோல்
அவள்கண் பனித்தது...
நல்லவனே.... உன்னால் தேறினேன்
மனிதனாய் மாறினேன்
உனக்கு என்ன, எப்பொழுது, எங்கு வேண்டுமானாலும்
தயங்காமல் கேள் என்று
சுட்ட சங்காய் சுடர்ந்தான்..
நிமிர்ந்த நடையொடு தொடர்ந்தான்..
- சகி
Dear Sagi,
ReplyDeleteAgain,it took me some time to understand what this is about.very brave choice as only a tamil movie buff can read this and since the story is already known,it is only your language that can make this interesting.
This piece replayed the entire scene of the movie which i had wwatched years ago in my mind.
reallly loved the arisi,arasiyil ,veril vellai,kadhani kalaani,and the vidhai vedithu ,maa veedu and mothirathan-->aaridam mothinaai.please keep writing