இணை
சாரல்மழை விட்டதும்
நம்பர் போட்ட மரமொன்றின் கிளையமர்ந்து
பார்த்துப் பார்த்து
கேட்கிறது மஞ்சள் மூக்கு ஆள்காட்டி.
பதிலேதும் சொல்லாமல்
ரசிக்கிறது
இறகுரசி அமர்ந்திருக்கும் இணையொன்று.
கேள்வி, பதிலுக்காக கேட்கப்படுகிறதா
தலையாட்டலுக்காக கேட்கப்படுகிறதா
என்பதைப் புரிந்துகொள்வதில் ஒளிந்துள்ளது
சுமுகவாழ்வின் சூட்சுமம்.
-சகி