Sunday, January 22, 2017

கூட்டம்

காக்கித் தொப்பி பலத்தினால கூட்டமெல்லாம் கலையுது
கலைஞன் எங்கே? தலைவன் எங்கே? தேடித்தேடி அலையுது
கணக்கு போட்ட வெள்ளவேட்டி நரிவேலைய பாக்குது
சாட்சியான கடலு மட்டும் விழுந்து எழுந்து சிரிக்குது


1 comment:


  1. தன்னெழுச்சியால் எழுந்த கூட்டம் தடுமாறுது
    தலைவன் என்று ஒருவன் இல்லை
    இருந்தால்தான் என்ன
    தடம் மாறும் தலைவர்களை
    கண்டுதானே தலைவனே வேண்டாமென்று
    தன்னெழுச்சியாய் எழுந்தீர்

    கோரிக்கை இதுவென்றிருந்தால்
    முடிவு எளிதாகும்
    கூட்டிக்கொண்டே போனால்
    விடிவென்பதேது

    அலைபாய்ந்த உள்ளம்
    அங்கேயே நிற்க
    அநியாயம் செய்யும்
    சமூகவிரோதிகள் நுழைந்தார்

    அடிவாங்கும் முன்னே
    தெளிந்திருக்கவேண்டும்
    அநியாயம் நடந்தேவிட்டது

    ReplyDelete